நண்பனே !
முதுகில் பாயும் அம்புகளை
நெஞ்சைக் கிழிக்கும் ஈட்டிகளை
மனதைக் குலைக்கும் குழப்பங்களை
கண்களை மயக்கும் பிம்பங்களை
உன் நரம்பின் சினத்தால்
உன் இரத்தத்தின் கனத்தால்
உன் இதயத்தின் பலத்தால்
உன் சுவாசத்தின் விஷத்தால்
உன் ஆற்றலின் அளவால்
தவிடுபொடி ஆக்கு ..
உன் உழைப்பெனும் நோய்க்கு
கரகோஷங்களை மருந்தாய் அருந்து
பொருத்தமில்லா இவ்வுலகின் பாடலுக்கு
வருத்தமில்லா உன் இனிய வாழ்க்கை
அர்த்தம் ஏதேனும் சேர்க்கும் வரை
முற்றுகையிட்டேனும் உன் வரிகளைப் படை
இகழ்வாரைத் தாங்கும் இந்தப் புவிக்கு
உன் புகழ் மேகத்தால் மாரியும்
இகழ்வாய் உன்னைப் பார்த்த பார்வைக்கு
உன் புகழெனும் போதையால் சுகவீனமும்
மகிழ்வாய் உன்னைப் போற்றிய மனதிற்கு
உழைத்த உன் கரங்களால் நன்றியும் செய் !
வெற்றி முரசுகள் கொட்ட
நீ விழுந்த கனத்தை முத்தமிட்டு
நன்றியுடன் கூறு
"எழுச்சி"!
மனதை பாதித்திருந்தால் "மகிழ்ச்சி"!
அன்புடன்,
ஹரி :)
தெய்வமே, நீ எங்கயோ போய்ட்ட!
ReplyDelete:) Nandri thalaiva!
Delete